தமிழ் கொண்டுவிடு யின் அர்த்தம்

கொண்டுவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

 • 1

  (ஒருவரை ஓர் இடத்துக்கு) அழைத்துச்செல்லுதல் அல்லது அழைத்துச்சென்று விடுதல்; (ஒருவரை) இட்டுச்சென்று (ஒன்றில்) விடுதல்.

  ‘கீழே விழுந்துகிடந்தவரை அவரது வீட்டில் கொண்டுவிட ஏற்பாடு செய்தோம்’
  ‘தம்பியைப் பள்ளியில் கொண்டுவிடாமல் என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’

 • 2

  (ஒரு பிரச்சினை, சிக்கல் போன்றவற்றுக்கு ஒருவரை) உள்ளாக்குதல்.

  ‘அவசரப்பட்டு எடுக்கும் முடிவு உன்னைச் சிக்கலில் கொண்டுவிடாமல் பார்த்துக்கொள்’
  ‘ஊர்ப் பிரச்சினை நம்மை ஆபத்தில் கொண்டுவிடப்போகிறது’