தமிழ் கொத்தமல்லி யின் அர்த்தம்

கொத்தமல்லி

பெயர்ச்சொல்

  • 1

    (அரைத்துத் துவையலாகவும் ரசம் முதலியவற்றில் வாசனைப் பொருளாகவும் பயன்படுத்தும்) மணம் உள்ள (பெரும்பாலும்) துளிரான பச்சை இலையைக் கொண்ட கீரை/ அந்த இலையை உடைய செடி.

  • 2

    (சமையலில் பயன்படும்) கொத்தமல்லிச் செடியின் பழுப்பு நிற விதை; தனியா.