தமிழ் கொத்திக்கொண்டுபோ யின் அர்த்தம்

கொத்திக்கொண்டுபோ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    (கிடைப்பதற்கு அரியதாக இருப்பதால்) விரைந்து கைப்பற்றுதல்.

    ‘உன் அழகுக்கு யாராவது உன்னைக் கொத்திக்கொண்டுபோய்விடுவார்கள்’
    ‘இருபதாயிரம் ரூபாய்ச் சம்பளம் தரும் வேலையைக் கொத்திக்கொண்டுபோக ஆயிரம் பேர் இருக்கிறார்கள்’