கொத்து -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொத்து1கொத்து2கொத்து3கொத்து4

கொத்து1

வினைச்சொல்கொத்த, கொத்தி

 • 1

  (பாம்பு, பறவைகள் முதலியன) குத்துவதுபோல் கடித்தல்.

  ‘காகம் எருமையின் மீது உட்கார்ந்து புண்ணைக் கொத்திக்கொண்டிருந்தது’
  ‘கோழி குப்பையைக் கொத்திக் கிளறியது’
  ‘தன்னைப் பிடிக்க வந்த கீரியைப் பாம்பு கொத்தியது’

 • 2

  (அலகால்) கவ்விப் பிடித்தல்.

  ‘பருந்து கோழிக் குஞ்சைக் கொத்திச் சென்றது’
  ‘காக்காய் வடையைக் கொத்திக்கொண்டு பறந்தது’

 • 3

  (மண்வெட்டியால்) வெட்டிக் கிளறுதல்.

  ‘தோட்டம் போடுவதற்காக நிலத்தைக் கொத்திக்கொண்டிருந்தார்’

 • 4

  (அரைப்பதற்கு அல்லது ஆட்டுவதற்கு ஏற்ற வகையில் அம்மி, ஆட்டுக்கல் முதலியவற்றின் மேல்பரப்பை உளிகொண்டு) சிறுசிறு குழி உண்டாகும்படி அடித்தல்; பொளிதல்.

  ‘அம்மி தேய்ந்து வழுவழுப்பாகிவிட்டது, கொத்த வேண்டும்’

 • 5

  வட்டார வழக்கு துண்டுதுண்டாகும்படி செய்தல்.

  ‘பலாக் காயைக் கொத்து’

 • 6

  இலங்கைத் தமிழ் வழக்கு (விறகு) பிளத்தல்; உடைத்தல்.

  ‘விறகு கொத்த ஆள் கிடைக்கவில்லை’

கொத்து -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொத்து1கொத்து2கொத்து3கொத்து4

கொத்து2

பெயர்ச்சொல்

 • 1

  (பூ, காய் போன்றவை) ஒன்றோடு ஒன்று நெருக்கமாகக் காணப்படும் நிலை.

  ‘கொத்துக்கொத்தாக மலர்கள் பூத்திருந்தன’
  ‘சாவிக் கொத்து’
  ‘தலை முடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்தான்’
  ‘ஒரு கொத்தில் பெரியதும் சிறியதுமாக ஆறு மாங்காய்கள் இருந்தன’

 • 2

  வட்டார வழக்கு (இட்லி போன்ற உணவுப் பொருள் தயாரிக்கும்போது) ஈடு; தடவை.

  ‘எத்தனை கொத்து இட்லி வைக்கட்டும்?’

கொத்து -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொத்து1கொத்து2கொத்து3கொத்து4

கொத்து3

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு ஒன்றேகால் கிலோவுக்குச் சமமான அளவு கொண்ட முகத்தல் அளவை.

கொத்து -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொத்து1கொத்து2கொத்து3கொத்து4

கொத்து4

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு அறுவடை செய்தவர்களுக்குக் கூலியாகத் தரப்படும் தானியம்.

  ‘விளைச்சலில் கொத்து போகச் சரியாகப் பன்னிரண்டு மூட்டைதான் தேறியது’