தமிழ் கொதி யின் அர்த்தம்

கொதி

வினைச்சொல்கொதிக்க, கொதித்து

 • 1

  (திரவங்கள்) வெப்பத்தினால் சூடாகி ஆவியாகும் நிலைக்கு வருதல்.

  ‘அடுப்பில் பால் கொதித்துப் பொங்கி வழிந்தது’
  ‘ரசம் கொதித்துவிட்டால் இறக்கி வை’

 • 2

  வெப்பநிலை சராசரியைவிட அதிகமாக இருத்தல்.

  ‘தரை கொதிக்கிறது; கீழே கால் வைக்க முடியவில்லை’
  ‘குழந்தைக்கு உடம்பு அனலாகக் கொதிக்கிறது’

 • 3

  மிகுந்த கோபம் அடைதல்.

  ‘தன்னை அவமானப்படுத்திவிட்டார்கள் என்று அவன் என்னிடம் கொதித்தான்’

தமிழ் கொதி யின் அர்த்தம்

கொதி

வினைச்சொல்கொதிக்க, கொதித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு வலித்தல்.

  ‘மேற்பல் கொதித்துக்கொண்டே இருக்கிறது’
  ‘புண் கொதிக்காமல் இருக்கக் குளுசையைப் போடு’

தமிழ் கொதி யின் அர்த்தம்

கொதி

பெயர்ச்சொல்

 • 1

  திரவம் கொதிக்கிற நிலை.

  ‘ஒரு கொதி வந்தவுடன் உலை நீரில் அரிசியைப் போடு!’

தமிழ் கொதி யின் அர்த்தம்

கொதி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு வலி.

  ‘பல்லுக் கொதியினால் சொத்தை வீங்கிக்கிடக்கிறது’