தமிழ் கொந்தளிப்பு யின் அர்த்தம்

கொந்தளிப்பு

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (கடலின் நீர்ப் பரப்பு) அலைக்கப்பட்டுப் பொங்கிவரும் நிலை.

  ‘வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாகச் சென்னையில் கடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ளது’
  ‘பூகம்பம், நிலச்சரிவு, கடல் கொந்தளிப்பு, வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்களால் நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது’

 • 2

  (உணர்ச்சியின்) குமுறல்.

  ‘முகம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் சிவந்துபோயிற்று’

 • 3

  (நாட்டில்) பதற்ற நிலை.

  ‘அரசியல் தலைவர் கைதானதைத் தொடர்ந்து நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது’