தமிழ் கொப்பளி யின் அர்த்தம்

கொப்பளி

வினைச்சொல்கொப்பளிக்க, கொப்பளித்து

 • 1

  வாய்க்குள் நீரை அடக்கி அலைத்துச் சுத்தம் செய்தல்.

  ‘முதலில் பல் துலக்கி வாய் கொப்பளித்துவிட்டு வா. பிறகு காப்பி குடிக்கலாம்’
  ‘வாய்ப் புண் குணமாக உப்புநீரால் வாயைக் கொப்பளி!’

 • 2

  (நீர் போன்ற திரவம் சிறிய துவாரத்தின் வழியாக) குமிழ்களுடன் வேகமாக வெளிப்படுதல்.

  ‘வெட்டுப்பட்ட காயத்திலிருந்து இரத்தம் கொப்பளித்தது’
  ‘சோடா பாட்டிலின் மூடியைத் திறந்ததும் நீர் கொப்பளித்து வழிந்தது’
  உரு வழக்கு ‘தன் மேல் மோதியவனைக் கோபம் கொப்பளிக்கத் திரும்பிப் பார்த்தான்’

 • 3

  (உடலில்) கொப்புளம் தோன்றுதல்.

  ‘கொதிக்கும் எண்ணெய் பட்டதால் கை கொப்பளித்துவிட்டது’
  ‘தீக்காயத்தால் கொப்பளித்த இடம் ஆறிவருகிறது’