தமிழ் கொம்பு யின் அர்த்தம்

கொம்பு

பெயர்ச்சொல்

 • 1

  (ஆடு, மாடு, மான் போன்ற சில விலங்குகளின் தலைப்பகுதியில்) அடியில் பெருத்தும் நுனியில் கூர்மையாகவும் நீண்டு வளர்ந்திருக்கும் உறுதியான உறுப்பு.

  ‘மாட்டின் கொம்பில் குஞ்சலம் கட்டியிருந்தார்கள்’
  ‘ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம்’
  ‘ஆட்டின் கொம்பு வளைந்திருந்தது’

 • 2

  (யானையின்) தந்தம்.

  ‘முதுமலைக் காட்டில் கொம்புடைந்த யானை ஒன்றைப் பார்த்தேன்’

 • 3

  வாயில் வைத்து ஊதுகிற பகுதி குறுகியும் மறுமுனை அகன்றும் உள்ள நீண்ட, ஒலி எழுப்பும் குழல் வடிவக் கருவி.

  ‘கோவிலில் கொம்பு ஊதியதும் தேர் புறப்பட்டது’
  ‘தாரை, தப்பட்டை அடித்துக் கொம்பு ஊதி அமைச்சரை வரவேற்றனர்’

 • 4

  (மரத்தின்) கிளை.

  ‘குரங்கு உச்சாணிக் கொம்பில் ஏறி உட்கார்ந்துகொண்டது’
  ‘பூவரசுக் கொம்பை ஊன்றி வைத்திருக்கிறேன்’

 • 5

  வட்டார வழக்கு குச்சி.

  ‘கீழே கிடக்கிற கொம்பை எடு’

 • 6

  (குறில் அல்லது நெடில்) உயிர் எழுத்தைச் சுட்டிக்காட்ட உயிர்மெய்யெழுத்தின் முன் அல்லது மேல் போடப்படும் அடையாளக் குறி.