தமிழ் கொம்புமுளை யின் அர்த்தம்

கொம்புமுளை

வினைச்சொல்-முளைக்க, -முளைத்து

  • 1

    (பெரும்பாலும் இடித்துக் கூறும் தொனியில்) (வேறு எவரும் பெற்றிருக்காத) சிறப்பை அல்லது தனித்துவத்தை ஒருவர் பெற்றிருத்தல்.

    ‘எல்லாம் தெரிந்தவன்போல் பேசுகிறாயே; கல்லூரியில் படித்தால் கொம்பு முளைத்ததாக அர்த்தமா?’
    ‘இவனுடைய குடும்பத்தில் இவன்தான் ஓரளவுக்கு வசதியாக இருக்கிறான். அதனால் தனக்குக் கொம்பு முளைத்துவிட்டதாக நினைக்கிறான்’