தமிழ் கொறி யின் அர்த்தம்

கொறி

வினைச்சொல்கொறிக்க, கொறித்து

 • 1

  (பல்லால் அல்லது அலகால்) கடித்தோ கொத்தியோ உரித்தோ தின்னுதல்.

  ‘எலி நெல்லைக் கொறித்துக்கொண்டிருந்தது’
  ‘அணில் கொறித்த மாம்பழம்’

 • 2

  (நொறுக்குத் தீனி) தின்னுதல்.

  ‘கடைக்குப் போனால் கொறிக்க ஏதாவது வாங்கி வா’