தமிழ் கொல் யின் அர்த்தம்

கொல்

வினைச்சொல்கொல்ல, கொன்று

 • 1

  (ஒருவரை) சாகடித்தல்; கொலைசெய்தல்; (விஷம் முதலியன) உயிரைப் போக்குதல்; உயிரிழக்கச் செய்தல்.

  ‘தலைவர் கொல்லப்பட்ட செய்தி நாட்டு மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது’
  ‘அவன் ஈ எறும்பைக் கூடக் கொல்லமாட்டான்’
  ‘ஆளை மெல்லமெல்லக் கொல்லும் தன்மையுடைய விஷம் இது’
  உரு வழக்கு ‘தொலைக்காட்சிகளில் தினமும் தமிழைக் கொல்கிறார்கள்’

 • 2

  மிக அதிக அளவில் துன்புறுத்துதல்.

  ‘குடிவெறியில் என்னைத் தினமும் அடித்துக் கொல்கிறான்’
  ‘வெயில் கொல்கிறது’

 • 3

  பேச்சு வழக்கு மிகவும் பாராட்டும்படியாகச் செய்தல்; வெளுத்துக்கட்டுதல்.

  ‘‘நேற்று கச்சேரியில் அந்தப் பாடகர் எப்படிப் பாடினார்?’ ‘கொன்றுவிட்டார், போங்கள்!’’