தமிழ் கொலை யின் அர்த்தம்

கொலை

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவரின்) உயிரைப் போக்கும் அல்லது (ஒருவரை) சாகடிக்கும் வன்முறைச் செயல்.

  ‘சொத்துத் தகராறு காரணமாக நடந்த கொலை’
  ‘கழுத்தை நெரித்துக் கொலை!’
  ‘தன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்க அவன் கொலை வெறியோடு அலைகிறான்’

 • 2

  (மொழி, பாட்டு போன்றவற்றை) கேட்கச் சகிக்க முடியாத அளவுக்குச் சிதைக்கும் செயல்.

  ‘ஆங்கிலம் பேச வராவிட்டால் விட்டுவிடு. இப்படிக் கொலை பண்ணாதே’
  ‘பாட்டா பாடினான்? சங்கீதக் கொலை!’