தமிழ் கொள்கை யின் அர்த்தம்

கொள்கை

பெயர்ச்சொல்

 • 1

  (அரசு, கட்சி போன்றவை கொண்டிருக்கும்) செயல்பாட்டுத் திட்டம் அல்லது நடைமுறை.

  ‘அரசின் புதிய கல்விக் கொள்கையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’
  ‘உங்கள் கட்சியின் கொள்கைகள் என்ன?’
  ‘மதுவிலக்குக் கொள்கை’

 • 2

  (தனி மனிதன், மதம் முதலியவை கடைப்பிடிக்க வேண்டும் என வைத்திருக்கும்) நெறிமுறை.

  ‘உயிர்க் கொலை கூடாது என்பது புத்த மதத்தின் கொள்கைகளுள் மிகவும் முக்கியமானது ஆகும்’

 • 3

  அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து ஆதாரங்களுடன் முன்வைக்கப்படும்) கோட்பாடு.

  ‘டார்வினின் பரிணாமக் கொள்கை’
  ‘சார்பியல் கொள்கை’