தமிழ் கொள்ளிவை யின் அர்த்தம்

கொள்ளிவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    இறந்தவரின் சடலத்திற்குத் தீ மூட்டுதல்.

    ‘கொள்ளிவைக்கப் பிள்ளை இல்லை என்பதுதான் அவருடைய கவலை’

  • 2

    (ஒருவருடைய பிழைப்பு அல்லது எதிர்பார்ப்பு, ஆசை முதலியவற்றுக்கு) தீங்கு விளைவித்தல்.

    ‘ஏதோ கூலி வேலைக்குப் போய்ச் சம்பாதித்துக்கொண்டிருக்கிறான். அதற்கும் கொள்ளிவைத்துவிடாதே’