தமிழ் கொள்ளைகொள் யின் அர்த்தம்

கொள்ளைகொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (உள்ளத்தை) மிகவும் கவர்தல்.

    ‘பாட்டும் நடனமும் எல்லோருடைய உள்ளங்களையும் கொள்ளைகொண்டன’
    ‘உங்கள் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட நடிகர் நடித்த படம் இது!’