தமிழ் கொளுத்து யின் அர்த்தம்

கொளுத்து

வினைச்சொல்கொளுத்த, கொளுத்தி

 • 1

  (கற்பூரம், மத்தாப்பு முதலியவற்றை) எரியச் செய்தல்; (விளக்கை) ஏற்றுதல்.

  ‘குழந்தை மத்தாப்பைக் கொளுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்’
  ‘அரிக்கன் விளக்கைக் கொளுத்தி இங்கே வை’
  ‘மின் விளக்கு இல்லை; மெழுகுவர்த்தியைக் கொளுத்து’

 • 2

  தீயில் அழியச் செய்தல்; எரித்தல்.

  ‘குப்பைகளை ஒன்றுசேர்த்துக் கொளுத்தினார்’
  ‘கலகக்காரர்களால் பேருந்துகள் கொளுத்தப்பட்டன’

 • 3

  (வெயில்) கடுமையாக அடித்தல்; காய்தல்.

  ‘கொளுத்தும் வெயிலில் பிரதமரைப் பார்க்க மக்கள் காத்துக்கிடந்தனர்’