தமிழ் கொழுத்த யின் அர்த்தம்

கொழுத்த

பெயரடை

 • 1

  (வருமானம் தொடர்பானவற்றில்) மிகுந்த; பெருத்த.

  ‘கொழுத்த லாபம்’
  ‘கொழுத்த வேட்டை’

 • 2

  சோதிடம்
  (காலத்தைக் குறிக்கும்போது) தீவிரத் தன்மை உடைய.

  ‘கொழுத்த ராகுகாலத்தில் ஊருக்குக் கிளம்புகிறாயா?’
  ‘நல்ல நாளா என்று பார்த்தபோது கொழுத்த அமாவாசை என்பது தெரியவந்தது’