தமிழ் கொழுந்து யின் அர்த்தம்

கொழுந்து

பெயர்ச்சொல்

 • 1

  (சில தாவரங்களின்) இளம் இலை, தளிர் போன்றவை.

  ‘வேப்பங்கொழுந்து வயிற்றுவலிக்கு நல்லது’
  ‘கொழுந்து வெற்றிலை’

 • 2

  (தளிர் போன்று தோன்றும்) நெருப்புச் சுவாலை.

  ‘தீக் கொழுந்து’
  ‘இயந்திரத்தின் கீழ் திடீரென்று தீக் கொழுந்து தோன்றியதும் அவன் பயந்துவிட்டான்’
  ‘சொக்கப்பனையில் கொழுந்துகள் சுழன்றுசுழன்று வீசிக்கொண்டிருந்தன’