தமிழ் கொழுந்துவிட்டு எரி யின் அர்த்தம்

கொழுந்துவிட்டு எரி

வினைச்சொல்எரிய, எரிந்து

 • 1

  (தீ) பிழம்புகளுடன் எரிதல்.

  ‘குப்பை நன்றாகக் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது’

 • 2

  உணர்ச்சிகள் மிகத் தீவிரமாகச் செயல்படுதல்; (கோபம், பகை உணர்வு போன்றவை) மேலோங்கி இருத்தல்.

  ‘தன்னை மட்டமாகப் பேசியவர்கள் பாராட்டும் அளவுக்கு ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் கொழுந்துவிட்டு எரிந்தது’
  ‘அவளை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற ஆசை அவன் மனத்தில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது’
  ‘இத்தனை ஆண்டுகள் ஆகியும் உன் மனத்தில் பழைய பகை கொழுந்துவிட்டு எரிகிறதே!’