தமிழ் கௌரவ யின் அர்த்தம்

கௌரவ

பெயரடை

 • 1

  (ஒருவரை) சிறப்பிப்பதற்காக வழங்கப்படுகிற; சிறப்பான தகுதி அடிப்படையில் நியமிக்கப்பட்ட.

  ‘கௌரவப் பட்டம்’
  ‘கௌரவ உறுப்பினர்’

 • 2

  பணம் பெற்றுக்கொள்ளாமல் சேவையை வழங்குகிற/அழைப்புக்கு இணங்கிப் பெருமைப்படுத்துகிற.

  ‘கௌரவ மருத்துவ ஆலோசகர்’
  ‘சங்கத்தின் கௌரவத் தலைவர்’

 • 3

  (நடிகரை அல்லது பிரபலமானவரைக் குறித்து வரும்போது) ஒரு திரைப்படத்தில் பணம் பெற்றுக்கொள்ளாமல் சிறிய வேடத்தில் தோன்றும்.

  ‘கௌரவ நடிகர்’
  ‘கௌரவ நடிகை’