தமிழ் கௌரவம் யின் அர்த்தம்

கௌரவம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒருவரின் அல்லது ஒருவர் சார்ந்துள்ள ஒன்றின்) உயர்ந்த நிலை; மதிப்பு.

  ‘பணம் இருந்தால் கௌரவம் தானே கிடைக்கிறது’
  ‘இந்த உலகில் கௌரவமாக வாழ முடியவில்லை என்று புலம்பினான்’
  ‘கௌரவமான குடும்பம்’
  ‘கௌரவமான வேலை’
  ‘போலிக் கௌரவம்’

 • 2

  (பிறருக்குத் தர வேண்டிய) மரியாதை.

  ‘படித்தவனாக இருக்கிறாய்; பெரியவர்களிடம் கௌரவமாக நடந்துகொள்ளத் தெரியவில்லையே!’
  ‘அவருக்கு உரிய கௌரவத்தைக் கொடுப்பதுதான் முறை’

 • 3

  மானம்.

  ‘கௌரவம் பார்க்காமல் அவரிடம் உதவி கேள்’
  ‘கௌரவப் பிரச்சினை’