தமிழ் கௌரவி யின் அர்த்தம்

கௌரவி

வினைச்சொல்கௌரவிக்க, கௌரவித்து

 • 1

  (ஒருவரை அவர் செய்த பணிகளுக்காக) பாராட்டிச் சிறப்பித்தல்.

  ‘கலைஞர்களுக்குப் பிரதமர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்’
  ‘அந்த அரசியல் தலைவரைக் கௌரவிக்கும் வகையில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது’

 • 2

  தக்க மதிப்புத் தருதல்; மதித்தல்.

  ‘ஒத்துப்போகாவிட்டாலும் பிறருடைய கொள்கைகளைக் கௌரவிக்க வேண்டும்’