தமிழ் கேடு யின் அர்த்தம்

கேடு

பெயர்ச்சொல்

 • 1

  (நல்ல நிலைக்கு நேரும்) தீங்கு; கெடுதி.

  ‘நாட்டின் ஒற்றுமைக்கு இனக் கலவரங்கள் கேடு விளைவிக்கும்’
  ‘போக்குவரத்து பெருகப்பெருகத் தூய்மைக் கேடுகளும் பெருகுகின்றன’

 • 2

  (புகழ், மதிப்பு ஆகியவற்றுக்கு) களங்கம்.

  ‘இந்த நிறுவனத்தின் நற்பெயருக்குக் கேடு விளைவிக்கச் சிலர் முயல்கிறார்கள்’

 • 3

  (சில பெயர்ச்சொற்களோடு இணைந்து வரும்போது) சிதைவு; குறைவு.

  ‘வெட்கக்கேடு’
  ‘ஒழுக்கக்கேடு’
  ‘சுகக்கேடு’

 • 4

  இருக்கிற நிலைமையே மோசமாக இருக்கும்போது, வேறொன்றை விரும்புவது சரியல்ல என்று எரிச்சலை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் சொல்.

  ‘தெருவில் விளக்கு இல்லை. ஊருக்குப் பூங்காதான் ஒரு கேடா?’
  ‘வீட்டுச் செலவுக்கே பணம் இல்லாதபோது உனக்குச் சுற்றுலா ஒரு கேடா?’

 • 5

  ஒன்றைச் செய்ய முடிந்தும் ஒருவர் அதைச் செய்யாமல் இருப்பதைக் கண்டு எரிச்சல்பட்டுக் கூறும் சொல்.

  ‘மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறாயே, கடனைத் திருப்பித் தர என்ன கேடு?’