தமிழ் கேலி யின் அர்த்தம்

கேலி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  ஒருவரை அல்லது ஒருவரின் செயலைக் குறித்து விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் கூறப்படுவது.

  ‘‘அடுத்த உலக அழகிப்பட்டம் உனக்குதான்’ என்று தங்கையிடம் சொன்னவளைப் பார்த்து, ‘போதும், உன் கேலி’ என்று தங்கை கூறினாள்’
  ‘என்னுடைய கேலியை அவன் தவறாக எடுத்துக்கொண்டுவிட்டான்’
  ‘உனக்கு எல்லாம் கேலிதான்!’

 • 2

  (ஒருவருடைய நடத்தை, செயல் முதலியவற்றைப் பேச்சிலோ எழுத்திலோ) மட்டம்தட்டிச் சிரிப்பை வருவிக்கும் சித்தரிப்பு.

  ‘சமகால நிகழ்வுகளைக் கேலியும் கிண்டலுமாக ஆசிரியர் சித்தரித்திருந்தார்’
  ‘கேலித் தொனியில் எழுதப்பட்ட நாடகம்’