தமிழ் கேள்விக்குறி யின் அர்த்தம்

கேள்விக்குறி

பெயர்ச்சொல்

 • 1

  கேள்வி வாக்கியம் என்பதை உணர்த்த இடப்படும் கொக்கி வடிவக் குறி.

 • 2

  கேள்வியை உள்ளடக்கிய முக பாவனை.

  ‘கூடி நின்ற கூட்டத்தைப் பார்த்துவிட்டு முகத்தில் ஒரு கேள்விக்குறியோடு என்னை நோக்கினார்’

 • 3

  ஒன்று நடப்பது அல்லது நிறைவேறுவது சந்தேகத்திற்கு இடமான நிலை.

  ‘இந்தத் திட்டம் குறித்த காலத்திற்குள் முடிவடையுமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது’
  ‘என் எதிர்காலமே கேள்விக்குறி ஆகிவிட்டது’