தமிழ் கேள்விப்படு யின் அர்த்தம்

கேள்விப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (ஒரு செய்தியை) நேரடியாக அல்லாமல் பிறர் சொல்லக் கேட்டறிதல் அல்லது தெரிந்துகொள்ளுதல்.

    ‘மாப்பிள்ளை பெரிய படிப்புப் படித்தவர் என்று கேள்விப்பட்டேன்’
    ‘நீ வேலையை விட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேனே, அது உண்மைதானா?’