தமிழ் கேவலம் யின் அர்த்தம்

கேவலம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  அவமானம்; இழிவு.

  ‘வரதட்சணை கேட்பதை இளைஞர்கள் கேவலமாகக் கருதினால்தான் அந்தப் பழக்கம் நிற்கும்’
  ‘குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால் பல கேவலங்களுக்கு உள்ளாக வேண்டியதுதான்’

 • 2

  (கீழ் நிலையில் உள்ளதைக் காட்டிலும்) கீழ்த்தரம்; மட்டம்; மோசம்.

  ‘மாட்டுத் தொழுவத்தைவிடக் கேவலமான நிலைமையில் இந்த நகர்ப் பகுதி இருக்கிறது’
  ‘மிருகத்தைவிடக் கேவலமாக நடந்துகொண்டான்’

 • 3

  மிகவும் மோசமான நிலைமை என்று ஒருவர் கருதுவதை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் சொல்.

  ‘இவ்வளவு பெரிய ஊரில், கேவலம் தெருவுக்கு ஒரு குப்பைத் தொட்டியாவது இருக்க வேண்டாமா?’
  ‘தந்திதான் கொடுக்கவில்லை. கேவலம், ஒரு தபாலாவது போடக் கூடாதா?’
  ‘கேவலம், மூவாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்குகிறவன் என்னை எதிர்த்துப் பேசிவிட்டான்’
  ‘கேவலம், பிழைப்புக்காக என்ன வேஷமெல்லாம் போட வேண்டியிருக்கிறது’

 • 4

  வட்டார வழக்கு (உடலின்) மோசமான நிலை.

  ‘உடம்பு என்ன இவ்வளவு கேவலமாகப் போய்விட்டது?’