கோட்டை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கோட்டை1கோட்டை2கோட்டை3

கோட்டை1

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் அரசர்கள் வசித்த) பாதுகாப்பிற்காக உயர்ந்த உறுதியான சுற்றுச்சுவரையும் கனமான பெரிய கதவுகளையும் கொண்ட (அகழி சூழ்ந்த) இருப்பிடம்.

  ‘அந்தப் பழங்காலக் கோட்டையை அரசு ஓர் அருங்காட்சியகமாக மாற்றியிருக்கிறது’
  ‘முற்காலத்தில் கோட்டையின் கதவுகளை உடைக்க யானைகள் பயன்படுத்தப்பட்டன’

 • 2

  (ஒருவர் அல்லது ஓர் அமைப்பு) மிகுந்த செல்வாக்குடன் விளங்குகிற இடம்.

  ‘எதிர்க்கட்சியினர் தங்கள் கோட்டை என்று பெருமைப்பட்டுக்கொண்டிருந்த தொகுதிகளிலேயே தோற்கடிக்கப்பட்டார்கள்’

 • 3

  சதுரங்க ஆட்டத்தில் தான் இருக்கும் நிலையிலிருந்து நான்கு பக்கங்களிலும் நேராக நகரும் காய்.

  ‘அவனுடைய இரண்டு கோட்டைகளையும் வெட்டிவிட்டேன்’

கோட்டை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கோட்டை1கோட்டை2கோட்டை3

கோட்டை2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (தானியத்தை அளக்கப் பயன்படும்) 115 கிலோ அல்லது 263 கிலோ கொண்ட ஓர் அளவு.

கோட்டை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கோட்டை1கோட்டை2கோட்டை3

கோட்டை3

பெயர்ச்சொல்

 • 1

  (அடுத்த பருவத்துக்கான) விதை நெல்லை வைக்கோலில் வைத்து வைக்கோல் பிரியால் கட்டி, சாணத்தால் மெழுகிவைக்கும் அமைப்பு.