தமிழ் கோட்டைவிடு யின் அர்த்தம்

கோட்டைவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

 • 1

  (கவனக் குறைவால்) தவறவிடுதல்.

  ‘பணத்தை இப்படிக் கோட்டைவிட்டுவிட்டு வந்து நிற்கிறாயே?’
  ‘நண்பருடன் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்ததில் ஏற வேண்டிய பேருந்தைக் கோட்டைவிட்டேன்’
  ‘கிடைத்த வாய்ப்பைக் கோட்டைவிட்டுவிட்டு இப்போது புலம்பி என்ன பயன்?’
  ‘பரீட்சையில் கோட்டைவிட்டுவிட்டான்’
  ‘கதைக்கும் வசனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தேன். ஆனால் காட்சியமைப்பில் கோட்டைவிட்டுவிட்டேன்’