தமிழ் கோடி யின் அர்த்தம்

கோடி

பெயர்ச்சொல்

 • 1

  லட்சம் என்னும் எண்ணின் நூறு மடங்கு.

தமிழ் கோடி யின் அர்த்தம்

கோடி

பெயர்ச்சொல்

 • 1

  (நீண்ட பரப்பு உடையவற்றில்) எல்லை; (இடத்தின்) கடைசிப் பகுதி.

  ‘ஊர்க் கோடியில் ஒரு குளம் உள்ளது’
  ‘தெருக் கோடியில் யாரோ வருவது தெரிந்தது’
  ‘வராந்தாவில் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமாக நடைபோட்டார்’

தமிழ் கோடி யின் அர்த்தம்

கோடி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு புது ஆடை; புதுத் துணி.

  ‘தீபாவளி அன்று மஞ்சள் தடவிக் கோடி உடுத்துவது வழக்கம்’

 • 2

  வட்டார வழக்கு இறந்தவரின் உடலுக்கு ஈமச் சடங்கில் அணிவிக்கும் புதுத் துணி.

 • 3

  வட்டார வழக்கு இறந்தவரின் ஈமச் சடங்கில் அவரது மனைவிக்கு அவளுடைய சகோதரர்கள் தரும் புதுத் துணி.