தமிழ் கோடு யின் அர்த்தம்

கோடு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு பரப்பில்) ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு.

  ‘தரையில் குச்சியால் கோடு கிழித்து விளையாட ஆரம்பித்தார்கள்’
  ‘கோடு போட்ட சட்டை’
  ‘அணிலின் முதுகில் மூன்று கோடுகள் உண்டு’

 • 2

  (தோலில் ஏற்படும்) சுருக்கம்.

  ‘நெற்றியில் கோடு விழுந்திருக்கிறது’

தமிழ் கோடு யின் அர்த்தம்

கோடு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு நீதிமன்றம்.