தமிழ் கோணம் யின் அர்த்தம்

கோணம்

பெயர்ச்சொல்

 • 1

  கணிதம்
  ஒன்றையொன்று சந்திக்கும் இரு கோடுகளின் திசைகளுக்கு இடையில் உள்ள (பாகையால் குறிக்கப்படும்) இடைவெளியின் அளவு.

  ‘இந்தக் கட்டத்தில் எத்தனை கோணங்கள் உள்ளன?’
  ‘முக்கோணத்தில் உள்ள கோணங்களின் கூட்டுத் தொகை 180ᵒ பாகை ஆகும்’

 • 2

  (ஒருவர் எடுத்துக்கொள்ளும்) நிலை; பார்வை; கண்ணோட்டம்.

  ‘ஒவ்வொரு விமர்சகரும் ஒவ்வொரு கோணத்தில் இலக்கியத்தை அணுகுகிறார்கள்’
  ‘கட்டடத்தை இந்தக் கோணத்தில் பார்த்தால் அழகாக இருக்கும்’
  ‘நான் சொல்வதைச் சரியான கோணத்தில் பார்!’