தமிழ் கோபப்படு யின் அர்த்தம்

கோபப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (ஒன்றின் மேல் அல்லது ஒருவரின் மேல்) கோபம் கொள்ளுதல்.

    ‘நீ கோபப்படும்படி அவள் என்ன சொன்னாள்?’
    ‘அப்பா உயிரோடு இருந்தவரையில் என்னிடம் எதற்காகவும்கோபப்பட்டதேயில்லை’
    ‘இந்தச் சின்ன விஷயத்துக்கு இப்படிக் கோபப்படலாமா?’