தமிழ் கோப்பை யின் அர்த்தம்

கோப்பை

பெயர்ச்சொல்

 • 1

  (குடிக்கப் பயன்படுத்தும்) ஒரு பக்கத்தில் கைப்பிடியுடைய சிறு பீங்கான் அல்லது கண்ணாடிப் பாத்திரம்.

  ‘தேநீர்க் கோப்பையின் பிடி உடைந்திருந்தது’

 • 2

  (சோறு முதலியவை வைக்கப் பயன்படுத்தும்) அடிப் பகுதி தட்டையாகவும் பக்கப் பகுதி புடைத்தும் இருக்கும் பாத்திரம்.

  ‘ஒரு கோப்பையில் சாதம், மற்றொரு கோப்பையில் குழம்பு’

 • 3

  (போட்டியில் வென்றவருக்கு அளிக்கப்படும் வெள்ளி அல்லது தங்க முலாம் பூசப்பட்ட) வேலைப்பாடு கொண்ட பரிசுப் பொருள்.

  ‘கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக அணியினருக்குக் கோப்பை வழங்கப்பட்டது’