தமிழ் கோபம் யின் அர்த்தம்

கோபம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும்போது ஒருவருடைய) முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு; சினம்.

    ‘அவருடைய கண்கள் கோபத்தால் சிவந்திருந்தன’
    ‘அவர் எனக்குக் கோபமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்’
    ‘‘அதைத் தொடாதே’ என்று கோபமான குரலில் கத்தினார்’