தமிழ் கோபி யின் அர்த்தம்

கோபி

வினைச்சொல்கோபிக்க, கோபித்து

  • 1

    (ஒருவர்மேல்) கோபம் கொள்ளுதல்; கோபப்படுதல்.

    ‘சொன்னபடி செய்யாவிட்டால் அவர் நம்மைக் கோபிப்பார்’
    ‘திருமணத்துக்கு உன்னை அழைக்காததற்காக என்னைக் கோபித்துக்கொள்ளாதே!’

தமிழ் கோபி யின் அர்த்தம்

கோபி

பெயர்ச்சொல்

  • 1

    கட்டடத்திற்குச் சந்தன நிறத்தைத் தரச் சுண்ணாம்புடன் கலந்து வர்ணமாகப் பூசப்படும் ஒரு வகைப் பொடி.

உச்சரிப்பு

கோபி

/(g-)/