தமிழ் கோமாளி யின் அர்த்தம்

கோமாளி

பெயர்ச்சொல்

  • 1

    உடையால், பேச்சால், அங்க அசைவுகளால் சிரிக்க வைப்பவன்.

    ‘மேடையில் கோமாளி தோன்றியதும் கைதட்டல் விண்ணைப் பிளந்தது’

  • 2

    பேச்சு வழக்கு எப்போதும் வேடிக்கையாக எதையாவது செய்துகொண்டிருப்பதால் பிறரால் ஏளனத்துடன் பார்க்கப்படும் நபரைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்.

    ‘அந்தக் கோமாளிப் பயலோடு சேர்ந்து நீயும் கூத்தடிக்காதே’