தமிழ் கோரம் யின் அர்த்தம்

கோரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (அச்சம் தரும்) கொடூரம்.

  ‘கோரமாகக் குத்திக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தான்’
  ‘அந்த நாடே வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கிறது’

 • 2

  அருவருப்பு; விகாரம்.

  ‘அவன் கோரமாகச் சிரித்தான்’
  ‘போன மாதம் நேர்ந்த தீ விபத்தால் அவர் முகம் கோரமாகிவிட்டது’