தமிழ் கோரு யின் அர்த்தம்

கோரு

வினைச்சொல்கோர, கோரி

 • 1

  (உரிமையுடன்) கேட்டல்; (முறையாக) வேண்டுதல்.

  ‘விபத்தில் காலை இழந்தவர் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடுத்துள்ளார்’
  ‘புதிய பொருளாதாரத் திட்டம்பற்றி அறிஞர்களின் கருத்துகள் கோரப்படும்’

தமிழ் கோரு யின் அர்த்தம்

கோரு

வினைச்சொல்கோர, கோரி

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (நீரைக் கையால் அல்லது பாத்திரத்தால்) அள்ளுதல்; முகத்தல்.

  ‘ஆற்றில் நீரைக் கோரிக் குடித்தான்’
  ‘ஊற்றிலிருந்து நீரைக் கோரித் தவலையில் ஊற்றினான்’