தமிழ் கோளாறு யின் அர்த்தம்

கோளாறு

பெயர்ச்சொல்

 • 1

  (இயக்கம், தன்மை, விளைவு முதலியவற்றை) பாதிக்கிற வகையில் ஏற்படும் சிக்கல்; சீர்குலைவு; தடை.

  ‘இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் நான்கு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது’
  ‘அவருக்கு இருதயக் கோளாறு’

 • 2

  (மோசமான) விளைவு.

  ‘‘பிள்ளைக்கு அதிகமாகச் செல்லம்கொடுத்த கோளாறு இப்போது கெட்டுத் திரிகிறான்’ என்று அவர் குறைபட்டுக்கொண்டார்’