தமிழ் கோழி யின் அர்த்தம்

கோழி

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும், கொண்டை அற்ற பெண் இனத்தையும் சிவப்பு நிறக் கொண்டையை உடைய ஆண் இனத்தையும் கொண்டிருக்கும், அதிக உயரம் பறக்காத பறவை; (குறிப்பாக) மேற்குறிப்பிட்ட இனத்தின் பெண் பறவை.

    ‘கோழிப் பண்ணை வைக்க வங்கியில் கடன் வாங்கினான்’
    ‘வீட்டுக்கு முன்னால் கோழிகள் மேய்ந்துகொண்டிருந்தன’
    ‘முட்டைகளைக் கோழி அடைகாத்தது’