தமிழ் கோழைத்தனம் யின் அர்த்தம்

கோழைத்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    எதிர்ப்பதற்குத் துணிவில்லாத, பயப்படும் தன்மை.

    ‘தவறு செய்பவர்களை எதிர்த்துப் போராடாமல் இருப்பது நமது கோழைத்தனம்’
    ‘‘சட்டபூர்வமாகத் தீர்வு காணாமல் ஆட்களை ஏவிவிட்டு அடிப்பது கோழைத்தனம்’ என்று அவர் தன்மீதான தாக்குதலைப் பற்றிக் கருத்துத் தெரிவித்தார்’