தமிழ் கோவிந்தாக் கொள்ளி யின் அர்த்தம்

கோவிந்தாக் கொள்ளி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (அனாதைப் பிணத்துக்கு) உறவு அல்லாத ஒருவரால் போடப்படும் கொள்ளி.

    ‘விபத்தில் இறந்த முதியவர் யார் என்று அடையாளம் தெரியாததால் மருத்துவமனை ஊழியர் ஒருவரே கோவிந்தாக் கொள்ளி போட்டுவிட்டார்’
    ‘நீ பாட்டுக்கு எங்காவது போய்ச் செத்துத்தொலைக்காதே. பிறகு கோவிந்தாக் கொள்ளிதான்’