தமிழ் கோவை யின் அர்த்தம்

கோவை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  ஓர் ஒழுங்கில் அமைந்த தொடர்ச்சி.

  ‘நூலைப் படித்துவிட்டுக் கருத்துகளைக் கோவையாக அவர் கூறினார்’

 • 2

  (கட்டுரைகளின்) தொகுப்பு.

  ‘ஆய்வுக் கோவை’

 • 3

  சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.

தமிழ் கோவை யின் அர்த்தம்

கோவை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  நீள் உருண்டை வடிவச் சிவப்புப் பழத்தைத் தரும் (வேலியில் படரும்) ஒரு வகைக் கொடி.

  ‘கோபத்தில் அவருடைய கண்கள் இரண்டும் கோவைப் பழம் போன்று சிவந்துவிட்டன’

தமிழ் கோவை யின் அர்த்தம்

கோவை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (அலுவலக) கோப்பு.

  ‘கோவைகளையெல்லாம் நீ இளைப்பாறுவதற்கு முன் ஒழுங்குபடுத்திவிடு’
  ‘இந்த வாரத்துக்குள் பார்க்க வேண்டிய கோவைகளே எக்கச்சக்கமாக உள்ளன’