தமிழ் கோஷ்டி யின் அர்த்தம்

கோஷ்டி

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு நோக்கத்திற்காக) வந்திருப்பவர்களின் திரள்.

  ‘கல்யாண கோஷ்டி மேளதாளத்துடன் தெருவில் சென்றுகொண்டிருந்தது’

 • 2

  (கருத்து வேற்றுமை, பகை முதலியவற்றின் காரணமாகப் பிரிந்த) பிரிவு.

  ‘அந்தக் கட்சி இப்போது இரண்டு கோஷ்டிகளாகப் பிளவுபட்டுள்ளது’
  ‘கோஷ்டிப் பூசல்கள் இந்த நிறுவனத்தைச் சீர்குலைத்துவிடும்’