கை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கை1கை2

கை1

வினைச்சொல்கைக்க, கைத்து

 • 1

  உப்புச் சுவை தெரிதல்; கரித்தல்.

 • 2

  வட்டார வழக்கு கசத்தல்.

  ‘பாகற்காய்போல் கக்கரிக்காய் கைக்கிறது’
  உரு வழக்கு ‘முகத்தில் கைத்துப்போன சிரிப்பு’

 • 3

  வட்டார வழக்கு (ஈயம் பூசாத பித்தளைப் பாத்திரத்தில் வைக்கப்படும் ரசம், இளநீர் போன்றவை) கெட்டுப்போதல்.

கை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கை1கை2

கை2

பெயர்ச்சொல்

 • 1

  தோளில் தொடங்கி முன்பகுதியில் விரல்களாகப் பிரிந்துள்ள உடல் உறுப்பு/(மணிக்கட்டோடு இணைந்திருக்கும்) உள்ளங்கையும் விரல்களும் உள்ள உறுப்பு.

  ‘கொரில்லாவின் கை போல் நீண்ட கை’
  ‘கையில் கண்ணாடி வளையல்கள்’
  ‘அவன் கையில் ஆறு விரல்கள் உள்ளன’
  ‘‘கையை நன்றாக விரி’ என்று அதட்டினார்’
  ‘சாலை விபத்தில் அவர் ஒரு கையை இழந்தார்’

 • 2

  (நாற்காலி போன்ற இருக்கைகளில் உட்கார்பவர்) கை வைத்துக்கொள்ள வசதியாக இருக்கும் பகுதி.

  ‘இது கை இல்லாத நாற்காலி’

 • 3

  (உடை அணிபவர்) கை நுழைக்கும் பகுதி.

  ‘அரைக்கைச் சட்டை’
  ‘முழுக்கைச் சட்டை’

 • 4

  ஆள்; நபர்.

  ‘இந்த வீடு மூன்று கை மாறி என்னிடம் வந்திருக்கிறது’
  ‘சீட்டு விளையாட ஒரு கை குறைகிறது’

 • 5

  கையால் இயக்கப்படக் கூடியது.

  ‘கைராட்டினம்’

 • 6

  கையில் வைத்துக்கொள்ளும் அளவுடையது.

  ‘கையகராதி’

 • 7

  (ஒருவரின்) பொறுப்பு.

  ‘இந்தப் பையனை உன் கையில் ஒப்படைக்கிறேன்’
  ‘இதை முடிவு செய்வது என் கையில் இல்லை’
  ‘பணத்தை அவர் கைக்கு மாற்றிவிட்டுவிட்டேன்’

 • 8

  கையால் அள்ளும் அல்லது கைக்குள் கொள்ளும் அளவு.

  ‘தோசை மாவுக்கு ஒரு கை உப்புப் போட்டுக்கொள்’
  ‘கோதுமை மாவோடு ஒரு கை அரிசி மாவைக் கலந்துகொள்’