தமிழ் கைகால் உதறு யின் அர்த்தம்

கைகால் உதறு

வினைச்சொல்உதற, உதறி

  • 1

    (ஒருவருக்கு) கடுமையான பயம் ஏற்படுதல்; (பயத்தின் காரணமாக) நடுக்கம் ஏற்படுதல்.

    ‘புதிதாக வந்திருக்கும் மேலாளரின் கோபத்தை நினைத்தாலே கைகால் உதறுகிறது’
    ‘அப்பாவைக் கண்டாலே அவளுக்குக் கைகால் உதறும்’