தமிழ் கைகோ யின் அர்த்தம்

கைகோ

வினைச்சொல்-கோக்க, -கோத்து

 • 1

  ஒருவருடைய கைகளை மற்றொருவர் இணைத்துக்கொள்ளுதல்.

  ‘குழந்தைகள் கைகோத்த வண்ணம் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார்கள்’
  ‘இருவரும் கைகோத்து ஆடினார்கள்’
  ‘மனிதச்சங்கிலிக்காக அனைவரும் கைகோத்தபடி நின்றிருந்தனர்’

 • 2

  (குறிப்பிட்ட நோக்கத்துக்காகப் பலர் அல்லது பல அமைப்புகள், துறைகள் போன்றவை) இணைதல்.

  ‘தகவல் தொழில்நுட்பமும் தொலைத்தொடர்பும் கைகோத்து ஒரு நவீனப் புரட்சிக்கு வித்திட்டுள்ளன’