தமிழ் கைங்கர்யம் யின் அர்த்தம்

கைங்கர்யம்

பெயர்ச்சொல்

 • 1

  (தெய்வம் தொடர்பான) தொண்டு; (தர்ம நோக்கமான) சேவை.

  ‘தலைமுறைதலைமுறையாகக் கோயிலுக்குக் கைங்கர்யம் செய்துவருகிறோம்’
  ‘இந்தத் தர்ம கைங்கர்யத்தை நீங்களே ஆரம்பித்துவையுங்கள்’

 • 2

  (கேலியாகச் சொல்லும்போது) (மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்) வேலை.

  ‘பேனாவின் முனை ஒடிந்திருப்பதைப் பார்த்துவிட்டு ‘இது யாருடைய கைங்கர்யம்?’ என்று கேட்டார்’