தமிழ் கைதட்டு யின் அர்த்தம்

கைதட்டு

வினைச்சொல்-தட்ட, -தட்டி

 • 1

  இரு கைகளையும் ஒலி வரும்படி தட்டுதல்.

  ‘குழந்தை கைதட்டி விளையாடிக்கொண்டிருந்தது’
  ‘யாரோ கைதட்டிக் கூப்பிடுவதைக் கேட்டுத் திரும்பினேன்’

 • 2

  கையால் ஒலி எழுப்பி மகிழ்ச்சி அல்லது பாராட்டுத் தெரிவித்தல்.

  ‘அவர் கவிதையைப் படித்து முடித்ததும் அனைவரும் பலமாகக் கைதட்டினார்கள்’